Saturday, February 21, 2009

என்னுயிரே...

மெல்லாடை உடுத்திய முழுமேகமும்

கரைந்தூற்றும் .. உன்எழில் கண்டு..

நட்சத்திர நீர் துளியாய் ...!


மாசில்லா அம்மழை சாரலும்

பாய்ந்தோடும்.. உன்மேனி தூய்மை கண்டு..

நலம் தரும் நதியாய் ...!


இதமான வெப்பமுடன் உலவும் அந்நீர் பரப்பும்

உறைந்தெழும்பும்.. உன்மென் மனம் கண்டு..

வெண் பனி பாறையாய் ...!


உருவாகிய உறைபனியும் கழன்றுடைந்து

கரைந்தே போகும்.. உன்துயரம் கண்டு..

சப்தம் மங்கிய சமுத்திரமாய் ...!


அப்பெருங்கடலும் வெப்பமுற்று கொதிந்து

நீராவியாய் மேலேறும் .. உன்கோபச் சூட்டில்..

தன்மை தாழ்ந்த முகிலாய் ...!

Thursday, February 5, 2009

நீயும் நானும் ...

நீயும் நானும் நேசிக்கையில்

நாகரீகமும் நசிங்கிடுமே ...


உனது கண்கள் பார்த்த கணம் முதலே

கல்லறை போக தோணுதடி ...

நீ நாணும் நாட்களிலே

எனது நகம் கூட கூசிடுமே ...

என்உடல் சிலிர்க்கும் உன் சினுங்களிலே

கண்டெடுத்தேன், சிற்பமும் அசை பொருளே ...

உன் அழகை பற்றி பாடுகையில்

வியந்தே போகும் என் மொழியே ...

எனது கண்ணீர் சிந்தும் பொழுதினிலே

உன் கரத்தால் அதை நீ கரைத்திடுவாய் ...

எனது வலிமையை எனக்கே வலியுறுத்தி

என்னை நீ வளர செய்தாய் ...

நான் தவறு செய்த தருணங்களில்

வாள்நட்சத்திரம் போல் வலம் வருமே

உனது மென் கோபம் என் மீதே ...


நாம் சண்டையாடி சேரும்பின்னே

வாய் வார்த்தைகள் யாவும் மறந்திடுமே ...

நாம் அழுத நிமிடங்கள்

அனைத்தும் அந்தரத்தில் மறைந்திடுமே ...

நீ வலியால் படும் வேதனையிலே

எனது கருவே கலைந்து போய்விடுமே ...


பெண்ணே ...

நீயும் நானும் நேசிக்கையில்

நாகரீகமும் நசிங்கிடுமே ...!!!