Thursday, December 11, 2008

குட்டி Angel !!!

கார் கூந்தல் பின்கழுத்தை ஒராசிட
கை விரல் கன்னத்தின் குழியில் ஆராய
கால்கள் இரண்டின்மேல் கைத்தறி பாவாடை படர்ந்திட
பிஞ்சி உடம்பினை தழுவும் தாவணி நழுவிட
அம்மம்மா அதை தாவாரதிலிருந்து அள்ளியெடுக்க
அத்தனை அழகையும் அப்புறமாய் நின்று அனுபவித்தேன் உன்னுடன் !!
நமது குட்டி Angel உன் அன்னையுடன் !!!

Wednesday, December 3, 2008

கரை மீது நடந்தென்னை கரைய வைக்கிறாள் !!!


மனிதர்களின் ஈர்ப்பை தான் மட்டுமே கொண்டிருப்பதாய்
நினைத்து கொண்டிருக்கும் கடல் காஞ்சனையே,
என்னவளிடமா போட்டி போடுகிறாய் ?
நீயோ ஒய்யாரமாய் ஓசையிட்டு
என் மௌனங்களைதான் சாகடிப்பாய் ..
அவளோ தனது மௌனத்தினாலே என்னை சாகடிப்பாள் ..
இத்தோல்வியை காரணமிட்டு தான்,
அவ்வழகின் பாதங்களில் மண்டியிடுகிறாயோ அலையாய் !?!

Monday, December 1, 2008

'அமுதாய் அழுகிறாள்...'


குருதியோட்டம் மேல்காண;
பருத்தியின் பதமாக;
கனிசமான கட்டழகில்;
தாய் மார்பு சூட்டில் அர்ப்பணிக்க துடிக்கும் சில்லென்ற நெஞ்சம்;

பச்சிளம் பசியினால் அன்னை மடியை நேர்நோக்கும் கண்கள்;
தரை தழுவா அடம்பிடிக்கும் கால்கள்;
அதனின் மெல்லிய உதைகள்;
அவையாவும் உயிர் தந்து உறுப்பையும் தந்ததாய்க்கு தரும் நன்றிகள்...

'ஒரு தினம் பல தருணம் அழகு ஆயிரம்'


நித்திரை கழிந்து நீ எழுகையில்
எதிர்நின்று உன் எழில்மயங்கினேன் !

குளியல் அறையின் அறுகால் உன் முழங்கை இடிக்க,
ஐயோ என சன்னமாய் ஓர் கதறல் அதில் கரைந்தேன் !!

உன் உதட்டில் உலாவி வரும் உப்புமா அரிசியும் அதை உள்ளே புகுட்டும் உள்ளங்கையும் உன்னதம் உன் உலகில் உறைந்தேன் !!!

ரசனை தொடரும் ...
உன் ரசிகன் சற்று மயக்கத்தில் உள்ளான்
எழுந்தவுடன் உன் எழில் பற்றி எழுதுவான் !!!

Tuesday, November 25, 2008

இவனும் அனாதைதாய் இறந்து சில திங்கட் கழித்து
தந்தை அழைத்து சில நாட்கள் கழித்து
என்மனை புகுந்தால், அங்கு பல மாவிலை கிழிந்து
கிடந்தமை, அவை எந்தையின் மறுமணம் கழிந்து !?!

Monday, November 24, 2008

'என்னவள் எனக்கு அன்னை'
முகம் வேர்த்து
கட்டுடல் கசங்கி
உள்ளம் மட்டும் நிறைந்த பார்வையாய்..

பிஞ்சி நெஞ்சத்தின் துடிப்பை உணர்ந்த கணம்
பஞ்சாய் பறந்தது அவளின் ரணம்

குட்டி, பால் பழகுவதற்கு வருமுன்
என்னை பார்க்கிறாள்.. அவளை
அன்னை ஆக மாற்றியவனை பார்க்கிறாள்.
ஈன்றெடுக்கும் வலிகளை எனதுடல்
அனுபவிக்க ஆரம்பித்துவிட்டன அக்கணம் முதல்..

தாய்மையில் மகிழ்ந்தாள் என் தாரம்
அவள்மார் துலாயடைப்பு தகர்க்கப்பட்டவுடன்.
மறுபடியும் என்னை பார்த்தாள்...
இம்முறை கண்களால் அல்ல
அதன்வழிவரும் கண்ணீரால்.

அழுகாமை தான் ஆண்மை என யார் கூறியது?
எனது ஆண்மை முழுமையுற்றதனால் தான் நான்
அழுகின்றேன்..
என்னவளின் உயிர்உடல் தளர கண்டு
அழுகின்றேன்..

இனியேனும் நம் கரு தழைத்தால்,
கருப் பையை என்பால் கொடுத்துவிடு என்னுயிரே...
அவ்வுயிரை வளர்க்க முயல்வேன்..
உன்பாரம் குறைக்க வாழ்வேன்...