கனவில் பெய்வது நிஜமெனில் அது
நினைவில் நிலைத்திட வரம் கொடு !
இன்று,
இரவில் நிறைவது மிகையெனில் அது
விடியலில் கறைந்திட விடை கொடு !
பனிக்கட்டி உருகுமே, உருக வைப்பதல்ல! அவள் அவ்வகை அல்ல .... !
காதல் ..
ஆயிரம் அழகு அற்புத உறவு
ஒருவனுக்கு ஒருத்தி நாகரீகம் பிறந்தது
சன்னமாய் சண்டை பிரிவின் உருக்கம்
முத்த சமாதானம் சேர்ந்தபின் சொர்க்கம்
புணரும் இனிமை காமம் கலவை
கல்யாண கனவு பேரின்ப வலி
இறுதி உறுதி அது கல்லறை உறக்கம்
முடிவை திருத்த யாரால் முடியும் ???
மனிதம் இயற்கை வரமாம்
தவறாம் என் சுயம் வரம் !!!
கற்பனை வேண்டும் கர்வமும் வேண்டும்
சித்தரிக்க படுபவை சிறப்பாய் வேண்டும்
மொழி இலக்கணம் மாறா வேண்டும்
மதி இலக்கணமும் மங்காது வேண்டும்
காதல் வேண்டும் காமம் வேண்டும்
விசரம் இல்லா விளக்கமும் வேண்டும்
பொய்யும் வேண்டும் மெய்யும் வேண்டும்
அழகு வேண்டும் அழுத்தமும் வேண்டும்
அடுத்து அடுத்து அடுக்கு தொடர் வேண்டும்
எதுகை ஏற்றியும் மோனை முல்கியும்
சோர்வில்லா சொல் நடை வேண்டும்
இவையனைத்தும் அணைத்து ஓர் கவி எழுத முனைந்தேன் ..
என் எண்ணம் முடங்கியதால் பிழையாய் முடித்தேன் … !!!
இம்மையில் பிறக்கும் முன்
உனக்குள் பிறந்தேன் …
கருவறைக்குள் காத்திருந்த காலமெல்லாம்
கருணை இல்லாமல் உதைத்தவன் நான் …
உன் குருதியில் மிதந்தவன் நான்
வெண் குருதியை குடித்தவனும் நான் …
பசியுற்ற போது பயந்த என்னை
மடியினில் ஆற்றி பாசத்தை ஊற்றி
என் அழுகையை அமைத்தவள் நீ
என் அழகுக்கு ஆரம்பமும் நீ …
எனது மலத்தை மாளாமல் கழுவி
எச்சிலை சலிக்காமல் சுவைத்து
குரல் வளம் கற்பிக்க தொடங்கி
நல்லவை நாற்பதையும் திணித்து
ஒழுக்கம் ஓம்ப வளர்த்தவள் நீ …
உனக்கு மாறாக நான் என்ன செய்ய ??
மறுமைக்கு போகும் முன்
உன்பாதம் தழுவேன் … அம்மா
வளர்தலும் தேய்தலுமாய்
வலம்வரும் என் நிலவே …
அப்பழக்கத்தை ஏன் காதலிடம் கடன் கொடுத்தாய் ??
தவிப்பது நான் அல்லவா ??
மெல்லாடை உடுத்திய முழுமேகமும்
கரைந்தூற்றும் .. உன்எழில் கண்டு..
நட்சத்திர நீர் துளியாய் ...!
மாசில்லா அம்மழை சாரலும்
பாய்ந்தோடும்.. உன்மேனி தூய்மை கண்டு..
நலம் தரும் நதியாய் ...!
இதமான வெப்பமுடன் உலவும் அந்நீர் பரப்பும்
உறைந்தெழும்பும்.. உன்மென் மனம் கண்டு..
வெண் பனி பாறையாய் ...!
உருவாகிய உறைபனியும் கழன்றுடைந்து
கரைந்தே போகும்.. உன்துயரம் கண்டு..
சப்தம் மங்கிய சமுத்திரமாய் ...!
அப்பெருங்கடலும் வெப்பமுற்று கொதிந்து
நீராவியாய் மேலேறும் .. உன்கோபச் சூட்டில்..
தன்மை தாழ்ந்த முகிலாய் ...!