Tuesday, November 25, 2008

இவனும் அனாதை



தாய் இறந்து சில திங்கட் கழித்து
தந்தை அழைத்து சில நாட்கள் கழித்து
என்மனை புகுந்தால், அங்கு பல மாவிலை கிழிந்து
கிடந்தமை, அவை எந்தையின் மறுமணம் கழிந்து !?!

Monday, November 24, 2008

'என்னவள் எனக்கு அன்னை'




முகம் வேர்த்து
கட்டுடல் கசங்கி
உள்ளம் மட்டும் நிறைந்த பார்வையாய்..

பிஞ்சி நெஞ்சத்தின் துடிப்பை உணர்ந்த கணம்
பஞ்சாய் பறந்தது அவளின் ரணம்

குட்டி, பால் பழகுவதற்கு வருமுன்
என்னை பார்க்கிறாள்.. அவளை
அன்னை ஆக மாற்றியவனை பார்க்கிறாள்.
ஈன்றெடுக்கும் வலிகளை எனதுடல்
அனுபவிக்க ஆரம்பித்துவிட்டன அக்கணம் முதல்..

தாய்மையில் மகிழ்ந்தாள் என் தாரம்
அவள்மார் துலாயடைப்பு தகர்க்கப்பட்டவுடன்.
மறுபடியும் என்னை பார்த்தாள்...
இம்முறை கண்களால் அல்ல
அதன்வழிவரும் கண்ணீரால்.

அழுகாமை தான் ஆண்மை என யார் கூறியது?
எனது ஆண்மை முழுமையுற்றதனால் தான் நான்
அழுகின்றேன்..
என்னவளின் உயிர்உடல் தளர கண்டு
அழுகின்றேன்..

இனியேனும் நம் கரு தழைத்தால்,
கருப் பையை என்பால் கொடுத்துவிடு என்னுயிரே...
அவ்வுயிரை வளர்க்க முயல்வேன்..
உன்பாரம் குறைக்க வாழ்வேன்...